வாழைச்சேனை-நாசிவன்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

0
197

(வாழைச்சேனை நிருபர்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் உருக்குலைந்த நிலையில் இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23) சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

நாசிவந்தீவு கட்டுமுறிவு பாலத்தின் வாவிக்கரையில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வாவிக்கரை கண்ணாக் காட்டுப் பகுதியில் இருந்து துர்நாற்றாம் வீசுவதை அறிந்து குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது ஆணின் சடலம் கிடப்பதை அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சடலத்திற்கு அருகில் இரண்டு கைத்தொலைபேசிகளும், பொதி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் முப்பத்தைந்து வயதிற்கும் நாற்பது வயதிற்கும் இடைப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

06 09

LEAVE A REPLY