கிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திருமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு

0
119

(நிப்ராஸ் மன்சூர்)

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் வெள்ளிக்கிழமை (22) நடத்தப்பட்ட கிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் திருகோணமலை மாவட்ட ஆண்கள் அணியும், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணியும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.

நடைபெறவிருக்கும் 44 வது தேசிய விளையாட்டு விழாவிற்கு கிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட அணியினை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இப்போட்டியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த உதைப்பந்தாட்ட விளையாட்டு அணிகள் பங்குபற்றியிருந்தன.

அன்றைய தினம் காலையில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் அம்பாறை, மட்டகளப்பு மாவட்ட அணிகள் விளையாடியிருந்தன. இதன்போது 3 யிற்கு பூசியம் எனும் கோல்கள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் ஆண்கள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஐந்திற்கு இரண்டு எனும் கோல்கள் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட ஆண்கள் அணி வெற்றி பெற்றது.

அன்றய தினம் பிற்பகல் மட்டக்களப்பு, திருகோணமலை ஆண்கள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதி முழுநேரப் போட்டியில் இரண்டிற்கு இரண்டு எனும் கோல்கள் அடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற தண்டனை உதை மூலம் நான்கிற்கு மூன்று எனும் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட ஆண்கள் அணி சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இப்போட்டிகளின்போது கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் என். மதிவண்ணன், மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். விஜயநீதன், மாகாண பயிற்றுவிப்பாளர் எம்.சி.எம் அதீக், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம் அமீர் அலி மற்றும் வி. ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

mmm

LEAVE A REPLY