கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம்

0
133

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை நேற்று (22) வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இச்சந்திப்பின்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம். சத்தார், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், ஏ.எம். பைறூஸ், எம்.எஸ்.எம். நிசார் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ். கயநித்தி, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர். அந்தவகையில் அவ்வபிவிருத்தி நடவடிக்கையினை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நகர திட்டமிடல் அமைச்சு மற்றும் கட்டடத் திணைக்களத்தின் உயர்அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் பிரிதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் கூட்டமென்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கல்முனைப் பொதுச் சந்தை வீதியினை சந்தை நடவடிக்கைகள் இடம்பெறும் நேரப்பகுதிக்கு ஒரு வழிப்பாதையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த சந்தையின் வீதியோரங்களில் மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கைகளை தடுக்குமாறும் குறித்த வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக அக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 2 3 4

LEAVE A REPLY