ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை 369 வழக்குகள் 14,11,500 ரூபா தண்டம்

0
197

(அப்துல் சலாம் யாசீம்)

ஜனவரி முதல் மே மாதம் வரை நுகர்வோர் அதிகார சபையின் சட்டங்களை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 369 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 14 இலச்சத்தி 11500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட உதவி இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளிவில் “நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் கூடிய விலைக்கு விற்றமை ,விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை.காலாவதியான உணவு பொருற்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டிற்காகவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் மூதூர், கிண்ணியா, சேறுவில போன்ற பகுதிகளில் 78 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக திருகோணமலை மற்றும் மூதூர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 3 இலச்சத்தி 32000 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டதாகவும் பெப்ரவரி மாதத்தில் 72 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 2 இலச்சத்தி 76 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் மார்ச் மாதம் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 2 இலச்சத்தி ஜயாயிரம் ரூபாய் தண்டம் அறிடப்பட்டதாகவும் ஏப்ரல் மாதம் 2 இலச்சத்தி 7500ரூபாய் தண்டம் 77 வழக்குகளுக்காக அறவிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.

இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்து வருவதுடன் ஜூன் மாதம் இன்று வரைக்கும் 48 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY