கசிப்பு உற்பத்தி கொள்கலன்கள் கைப்பற்றல்

0
99

(வாழைச்சேனை நிருபர்)

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்து சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பதினெட்டு கொள்கலன்களை புதன்கிழமை (19) இரவு கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையிலான குழுவினர்களால் இரவு பகலாக ஓமடியாமடு பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த கசிப்பு உற்பத்தி கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அறிந்த கசிப்பு உற்பத்தியாளர்கள் கசிப்பு உற்பத்திப் பொருட்கள் மற்றும் கொள்கலன்களை விட்டு தப்பி ஓடியுள்ளதாக நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஓமடியாமடு பகுதியில் அதிக சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸாரினால் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் அமைத்து ஒரு மாத கால பொலிஸ் சேவை இடம்பெற்று வருகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதைப் பாவனை இடம்பெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

01 (4)

LEAVE A REPLY