மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு

0
121

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி நேற்று (20) புதன்கிழமை ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் பொலீஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி மட்டக்களப்பில் இவருக்கான பொலிஸ் பிரியாவிடை வைபவம் நேற்று காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறற்து.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித பணாங்கொட, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவான் வெதசிங்க, திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.நிமால் பெரேரா உட்பட மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரி, அம்பாறை மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து

இதன் போது ஓய்வு பெற்றுச் செல்லும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜெயக்கொட ஆராச்சிக்கான பொலிஸ் அணி வகுப்பு மரியாதை இடம் பெற்றதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜெயக்கொட ஆராச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டரை வருடங்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DSCN1651 DSCN1625

LEAVE A REPLY