திருகோணமலையில் செல்பி எடுத்தவர்களுக்கு பினை

0
224

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான வனப்பாதுகாப்பு பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து “செல்பி” எடுத்த நான்கு பேரையும் ஒரு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான லைட் பார் என்ற இடத்திற்கு சென்று செல்பி எடுத்துக்கொண்டிருக்கும் போது கடற்படையினர் கைது செய்து துறைமுக அதிகார சபை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளர்.

இதனையடுத்து தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பேரையும் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவித்தவர்கள் சீனக்குடா பகுதியைச்சேர்ந்த 15,17,19 வயதுடையவர்கள் எனவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY