அக்­க­ரைப்­பற்று தாக்­குதல் விவ­காரம்: ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச சபை தவி­சா­ள­ருக்கு விளக்­க­ம­றியல்

0
173

அம்­பாறை மாவட்டம் அக்­க­ரைப்­பற்று 40 ஆம் கட்டை பிர­தே­சத்தில் நடந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச சபை தவி­சா­ளரை இம்­மாதம் 26 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­மன்ற நீதி­ப­தியும் மேல­திக நீதவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான பீற்றர் போல் உத்­த­ர­விட்டார்.

நேற்று மன்றில் ஆஜ­ரான போதே மேற்­படி உத்­த­ரவை பிறப்­பித்தார்.

இத்­தாக்­குதல் சம்­பவம் நடந்த இடத்தில் நின்­ற­வர்­க­ளிடம் பொலிசார் மேற்­கொண்ட தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலும் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியை நீதி­பதி விசா­ரணை செய்­ததின் அடிப்­ப­டையிலும் நீதி­பதி மேற்­படி உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அக்­க­ரைப்­பற்று பொத்­துவில் வீதி 40 ஆம் கட்டை பிர­தே­சத்தில் கடந்த 18 ஆம் திகதி அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவ­ருக்கு சொந்­த­மான காணிக்கு வேலி அமைக்க உற­வி­னர்கள் சில­ருடன் சென்ற போது, அங்கு வருகை தந்த பலர், வேலி அமைத்துக் கொண்­டி­ருந்­த­வர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

இச்­சம்­ப­வத்தில் 6 பேர் படு­கா­ய­ம­டைந்து அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக 4 பேர் கல்­முனை அஸ்ரப் ஞாப­கார்த்த வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­தனர். பின்னர் நேற்று 4 பேரும் மீண்டும் அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் இரு மோட்டார் சைக்­கிள்­க­ளுக்கும் சேதம் ஏற்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை நேற்று முன்­தினம் ஆலை­யடி வேம்பு பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Vidivelli)

LEAVE A REPLY