பிரதேச தொடர்பாடல் அதிகாரியாக நாகூர் நூர் முகம்மட் ஜனாதிபதியால் நியமனம்

0
78

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த நாகூர் நூர் முகம்மட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதேச தொடர்பாடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விஷேட கண்கானிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான மக்கள பங்கேற்பை உறுதிப்படுத்துவதையும் ஜனாதிபதி அவர்களின் தொலை நோக்கை பொதுமக்களிடம் கொண்டு செல்வதையும் நோக்காகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல்” நிகழ்ச்சித் திட்டத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்கான பிரதேச தொடர்பாடல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஜமாலியா நாகூர் காதர் பீவி ஆகியோரின் மகனும் சமாதான நீதவானும் ஆவார்.

LEAVE A REPLY