பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா துபாய் பயணமானார்

0
156

(முஹம்மட் அஸ்மி)

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி சாஹிர் மௌலானா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (19) மாலை துபாய் பயணமானார்.

மத்தியகிழக்கு மருத்துவ பல்கலைக்கழகத்தின் (Gulf Medical University) இன் அழைப்பின் பேரில் இலங்கை சார்பில் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதியமைச்சர் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன், இலங்கையிலும், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும், மருத்துவ துறையில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் அங்கு கருத்தாடல்களை மேற்கொள்ள உள்ளார்.

LEAVE A REPLY