பொலிஸாரின் தலையீட்டினால் நஞ்சருந்தியவர் வைத்தியசாலையில் …

0
101

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸாரின் தலையீட்டினால் நஞ்சருந்திய நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு நஞ்சருந்தியவர் கோமரங்கடவெல, ரங்கிரி உல்பொத்த பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.எம்.வீரசிங்க (56 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோமரங்கடவெல பொலிஸாரினால் உல்பொத்த பகுதியில் 19 கிலோ மறை இறைச்சி மீட்கப்பட்டதாகவும் அந்த இறைச்சி தன்னுடையது என ஒப்புக்கொள்ளுமாறு பொலிஸார் வற்புறுத்தியதாகவும் அதனால் தான் செய்யாத குற்றத்தை தனக்கு சுமத்துவதினால் நஞ்சருந்தியதாகவும் நோயாளியான டபிள்யூ.எம்.வீரசிங்க வைத்தியசாலை தரப்பினரிடம் தெரிவித்ததாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஆனாலும் இது தொடர்பாக கோமரங்கடவெல பொலிஸாரிடம் கேட்ட போது மறை இறைச்சி மீட்கப்பட்டதாகவும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனக்கு பொலிஸார் தொல்லை படுத்துவதாக நஞ்சருந்திய நபர் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY