ஓட்டமாவடி – மீராவோடையில் அல் ஹிதாய அஹதியா பாடசாலை வகுப்புக்கள் ஆரம்பம்

0
88

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பிரிவில் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இஸ்லாமிய சமய (தஹம்) பாடசாலை அல் ஹிதாயா அஹதியா பாடசாலை எனும் பெயரில் 8 ஆசிரியர்களையும் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளையும் கொண்டு தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இப் பாடசாலை அஹதிய மத்திய நிலையத்தின் பாடத்திட்டத்திற்கு அமைவாக இஸ்லாமிய அகீதா, இபாதா, அக்லாக் மற்றும் ஸீரா வத் தாரீஹ் ஆகிய பாடங்கள் நடைபெற்றுவருகின்றன.

இவ் அஹதியா பாடசாலையின் அதிபராக எம்.சீ. ஐயூப்கான் அவர்களும் தலைவராக ரீ.எல்.அமானுல்லா ஆசிரியரும், செயலாளராக பீ.எம். பசால் முகம்மட் ஆசிரியரும் இதனை செயற்படுத்தி நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY