பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கல்முனை பிரதேசத்தில் புதிய பாலங்கள்

0
59

(அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கிராமிய பாலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபம் அருகாமையிலுள்ள வீதிப் பாலம் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளதோடு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினையும் ஸம் ஸம் வீதியினையும் கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட வீதியுடன் இணைக்கும் வகையில் புதிய பாலங்களும் அமைக்கப்படவுள்ளன.

அதற்கமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆர். சத்தியநாதன் நேற்று (19) செவ்வாய்க்கிழமை குறித்த பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டார்.

இதன்போது கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப். றகுமான், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சத்தார், நௌபர் ஏ. பாவா மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி அன்புமுகைதீன் றோஷன், தொழில் அதிபர் எச்.எம்.எம். அமீர் அலி ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்.

IMG_4031

LEAVE A REPLY