மீராவோடையில் குரங்கு தொல்லை

0
107

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை ஜும்ஆப் பள்ளியை அண்மித்த பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளில் நாளாந்தம் குரங்குகளின் வருகையால் அப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குல் புகுந்து வீட்டு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகின்றது.

அதே போன்று வீதியோரங்களில் நிருத்தி வைக்கப்படுகின்ற வாகனங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்வதாக அப் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி குரங்குகளின் வருகையினை கட்டுப்படுத்த வேண்டும் என்று அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY