கிழக்கு மாகாணத்திற்கு தங்கப் பதக்கம்

0
56

(அப்துல் சலாம் யாசீம்)

விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 44வது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

44வது தேசிய விளையாட்டு விழா கடந்த 15ம் திகதி முதல் 18ம் திகதி வரை இடம் பெற்றது.

இவ்விளையாட்டு நிகழ்வில் கிழக்கு மாகாணம் சார்பில் திருகோணமலையைச்சேர்ந்த இரண்டு பெண்கள் பீச் ஔிபோல் (கடற்கரை ஔிபோல்) விளையாட்டு போட்டியில் பங்கு பற்றி தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஈ.டி.வாசனா மதுமாலி மற்றும் ஏ.ஹசுனி தாறுக லக்‌ஷானி ஆகியோர் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY