மண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்!

0
85

(NFGG ஊடகப்பிரிவு)

மன்முனைப்பற்று பிரதேச செயலக 155ஏ கிராம சேவையாளர் பிரிவு ஒல்லிக்குளத்தில் அமைந்துள்ள அப்துல் கபூர் ஹாஜியார் வீதியினை கிறவல் வீதியாக அமைக்கும் பணிகள் மன்முனைப்பற்று பிதேச சபை NFGGஉறுப்பினர் ஏ.எல்.எம்.றஹ்மதுழ்ழாஹ் அவர்களினால் நேற்று முன்தினம் (17) காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதற்கான நிதிப்பங்களிப்பாக பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.றஹ்மதுழ்ழாஹ் அவர்கள் தனக்கு நகர சபையூடா கிடைக்கப்பெறுகின்ற மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கி இருந்ததுடன் குறித்த சபையால் அவருக்காக ஒதுக்கப்பட்ட ஐந்து டிப்பர் கிறவலையும் இதற்காக பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பிரதேச மக்களும் சிரமதான பணிகளில் ஈடுபட்டு வீதி செப்பனிடும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

மேற்படி நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்ணணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் அவர்களும், காத்தான்குடி நகர சபை NFGG உறுப்பினர் இல்மி அஹமட் லெவ்வை அவர்களும் NFGG உறுப்பினர் சகோதரர் எம்.சரீப் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறு திகளுக்கமைவாக தனது உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவுகளை இவ்வாறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதும் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை நடைமுறைப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20180617-WA0006 IMG-20180617-WA0007 IMG-20180617-WA0009 IMG-20180617-WA0012

LEAVE A REPLY