கிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை

0
124

(அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை 21ம் திகதி நடைபெறவுள்ளது.

வழமையாக ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெற்று வருகின்ற மக்கள் சந்திப்பு தவிர்க்க முடியாத காரணத்தினால் நடைபெற மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கும் தங்களுடைய பிரச்சினைகளை நேரில் வந்தும் கடிதம் மூலமாகவும் தெரியப்படுத்த முடியுமெனவும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தங்களுக்கு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பினால் 0772111113 ஹஸன் அலால்தீன் என்ற இலக்கத்துடனோ அல்லது 0777004772 எனும் இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY