கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்

0
100

(எச்.எம்.எம்.பர்ஸான்)

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வும் திறந்த கலந்துரையாடலும் திட்டமிட்டபடி மிகவும் சிறப்பான முறையில் பெருநாள் தினமான கடந்த சனிக்கிழமை (16) மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இரவு 8.30 தொடக்கம் 10 மணிவரை நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ. அப்துர் ரஹுமான் அஸ்ஹரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த உலமாக்களின் பங்குபற்றுதலுடன் ஒன்றியத்திலுள்ள ஏறாளமான உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் இலங்கையில் தென்பட்ட ஹிஜ்ரி 1439 க்கான ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை தொடர்பாக நாட்டில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பான தெளிவூட்டும் உரையாடலும், திறந்த கலந்துரையாடலும் மற்றும் எதிர்கால தஃவா நடவடிக்கைகள் அதனை எதிர்கொள்ளும் சாவல்கள் தொடர்பாகவும் இச் சந்திப்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

_DSC1096 _DSC1098 _DSC1105 _DSC1107

LEAVE A REPLY