மகிந்த ராஜபக்‌ஷவின் வருகையினால் நெருக்கடியான 5 சிறார்கள் வைத்தியசாலையில் …

0
149

(அப்துல் சலாம் யாசீம்)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஹொரவ்பொத்தானை பிரசேத்திலுள்ள முக்கரவெவ கிராமத்திற்கு நேற்று முன்தினம் (17) பிற்பகல் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இவரை வரவேற்பதற்காகவும், பார்வையிடுவதற்காகவும் பெரும் திரளான மக்கள் வருகை தந்திருந்தனர்.

இதன் போது மகிந்த ராஜபக்‌ஸவின் வருகையையடுத்து சன நெருக்கடிக்குள் சிக்கி சிறுவர்கள் ஜந்திற்கும் மேற்பட்டவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

அத்துடன் மகிந்தவை ராஜபக்ஸவை பார்வையிடச் சென்றவர்கள் வாகனத்திற்கு முன்னால் சென்று முகத்தை பார்ப்பதற்கு அவகாசம் தாருங்கள் என கூறி சத்தமிட்டதுடன் வாகனத்திற்கு முன்னாள் மறைத்து நின்றனர்.

இதனையடுத்து முக்கரவெவ ஜூம்மா பள்ளி வாசலில் விஷேட கூட்டமும் இடம் பெற்றது.

அக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்‌ஷ உரையாற்றுகையில் எமது நாடு இதனை நாமே பாதுகாக்க வேண்டும். மண்ணென்னெய்யின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணென்னையின் விலையை அளவுக்கு அதிகமா கூட்டி விட்டு மீண்டும் சிறியளவில் குறைத்துள்ளனர்.

இதுதான் அவர்களுடைய சேவை! மக்கள் இனிமேலும் ஏமாற மாட்டார்கள் என்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது.

இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். மக்கள் இப்போது என்னை ஆதரிப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது.

அனுராதபுரத்திற்கு நான்கு மணித்தியாலயத்தில் சென்ற பயணத்தை 40 நிமிடத்தில் செல்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை மக்கள் தெரிந்திருப்பீர்கள். அதேபோல இனிவரும் காலங்களில் 18 வயதாகினால் இளைஞர்கள் கட்டும் மணிக்கூட்டின் விலையை பார்த்தும், அவர்கள் பாவிக்கும் கையடக்க தொலைபேசியை பார்த்தும் வரி அறவிடப்படும். எல்லாவற்றிற்கும் வரி அறவிடப்படும்.

எனவே மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என்பதை நான் அறிவேன் எனவும் ஒற்றுமையாக வாழ்வதையே நான் விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

DSC_1201 DSC_1208 DSC_1250 DSC_1296 DSC_1300

LEAVE A REPLY