மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம்

0
255

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் நேற்று முன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றத்தின் உதவியுடன் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினது நிதியுதவியுடனும் அவுஸ்த்ரேலியா நாட்டின் நிதி யுதவி சிறீலங்கா ரெலிகொம் உட்பட பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்;களின் நிதியுதவியுடன் சுமார் 80 கோடி ரூபா செலவில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன், இலங்கையின் தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றத்தின் தலைவர் அவுஸ்த்ரேலியாவைச் சேர்ந்த எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுனர் வைத்திய கலாநிதி டேவிட் யங், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட வைத்திய நிபுனர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள், அவுஸ்த்ரேலியாவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், இதற்கு நிதியுதவிகளை வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்;கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அடுத்ததாக முற்றிலும் நவீன முறையில் பல் வேறு வசதிகளுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள் பயன் பெறக் கூடிய வகையில் இந்த சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் அமையப் பெற்றுள்ளதுடன் இங்கு சத்திர சிகிச்சைக் கூடங்கள் மற்றும் விடுதிகள் ஆய்வு கூட வசதிகள் உட்பட பல் வேறு பகுதிகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

சுனாமி அனதத்தின் பின்னர் இலங்கையின் தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றத்தின் தலைவர் அவுஸ்த்ரேலியாவைச் சேர்ந்த எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுனர் வைத்திய கலாநிதி டேவிட் யங் அவர்களின் ஆலோசனையுடன் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சுகாதார அமைச்சின் உதவியுடன் இது நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSCN1528 DSCN1529 DSCN1533 DSCN1536 DSCN1543 DSCN1558 DSCN1560 DSCN1561 DSCN1565 DSCN1566

LEAVE A REPLY