மட்டக்களப்பு மாநகர சபையின் மாதார்ந்த அமர்வு பிற்போடப்பட்டது

0
76

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு மாநகர சபையின் (14.06.2018) வியாழக்கிழமை நடைபெறவிருந்த மாதார்ந்த அமர்வு பிற்போடப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கிய நாதன் தெரிவித்தார்.

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தில் ஈடுபடுவதால் குறித்த அமர்வு பிற்போடப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிளாகும். அவர்கள் சுகயீன லீவு போராட்டத்தில் இருப்பதால் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிந்ததையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் மாதார்ந்த அமர்வு பிற்போடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY