பிரதி அமைச்சர் அங்கஜனுக்கு யாழ்ப்பாணத்தில் வரவேற்பளிப்பு

0
88

(பாறுக் ஷிஹான்)

விவசாயத் துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று (16) சனிக்கிழமை ஆதரவாளர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கஜன் இராமநாதன், பிரதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதற் தடைவயாக யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு இன்று காலை வருகைதந்தார்.

இதன் போது அங்கு திரண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

a

LEAVE A REPLY