காத்தான்குடி சிட்டி ஒப்டிகள் ஸ்தாபனத்தின் முகாமையாளர் முஹம்மது சஜி அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

0
218

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி -05 அரபிக் கலாசாலை வீதியில் வசிக்கும் செயினுலாப்தீன் முஹம்மது சஜி மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் அண்மையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான முதுமானிப் பட்டதாரியும், கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியும், காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம், காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை, காத்தான்குடி அல்-ஹிரா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளையின் ஆலோசகரும், ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் உப தலைவரும், யு.ஜி இளைஞர் கழகத்தின் பொருளாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி கிளை என்பவற்றின் உறுப்பினரும், காத்தான்குடி சிட்டி ஒப்டிகள் ஸ்தாபனத்தின் முகாமையாளரும், காத்தான்குடி நியுஸ் பெஸ்ட் நெட் இணையத்தளத்தின் செய்தியாளரும் மர்ஹூம் முஹம்மட் செயினுலாப்தீன் ஜனாபா பாத்திமா ஜெஸீமா ஆகியோரின் புதல்வரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

1-DSC_0007-

LEAVE A REPLY