ஓட்டமாவடியில் பெருநாள் தொழுகை

0
116

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை ஜமாதே இஸ்லாமியின் ஓட்டமாவடி கிளை ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், கொத்பா பேருரையும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று (16) சனிக்கிழமை காலை இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும், கொத்பா பேருரையையும் மௌலவி எஸ்.ஐ.றம்ளார் நடாத்தியதுடன், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிறைந்துரைச்சேனை போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதன்போது இனநல்லுறவுக்காக விஷேட பிரார்த்தனையும் இடம்பெற்றதுடன், பின்னர் கலந்து கொண்டவர்கள் முஸாபா செய்து கொண்டனர்.

01 04 06 09 10

LEAVE A REPLY