பல்லின மக்களைக் கொண்ட நாட்டில் வாழும் நாம் பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமூகத்தில் உள்ளவர்களுடன் சகோதர மனப்பான்மையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்

0
63

(வாழைச்சேனை நிருபர்)

நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில்!

பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம் எவைகளை தவிர்த்துள்ளதோ அவைகளை நமது பழக்க வழக்கத்தில் இருந்து தவிர்த்து வாழ்வதற்கு இந்நாளிலிருந்து அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும்.

பல்லின மக்களைக் கொண்ட நாட்டில் வாழும் நாம், இந்நாட்டிலுள்ள பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமூகத்தில் உள்ளவர்களுடன் சகோதர மனப்பான்மையுடன், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் ஒவ்வொருவரும் வாழப் பழகிக் கொள்ள வேண்டுவதுடன், அவர்களுடன் சகோதர மனப்பான்மையுடன் பழகுவதற்கு இந்நேரத்தில் இறைவனை பிரார்த்திப்போம்.

எமது நாட்டில் இன முறுகல் நிலை ஏற்படக் கூடிய வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களின் இனத்தின் மீதான வன்முறைகளில் இருந்து எம்மை பாதுகாக்துக் கொள்வதற்கு நாம் அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் பிராத்தித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்குவதற்கு இறைவனிடத்தில் அனைவரும் துவா செய்யுங்கள் தனது பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY