மக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்

0
106

(எம்.ரீ. ஹைதர் அலி)

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நிருவாக எல்லைக்குட்பட்ட பாலை நகர் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் நுழைவாயிலில் காணப்படும் வீதி மின்விளக்கு பல நாட்களாக செயழிலந்த நிலையில் திருத்தப்படாமல் இருப்பதனை தியாவட்டவான் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் என்னால் அவதானிக்க முடிந்தது.

இது விடயமாக நான் கடந்த மூன்று வாரங்களாக ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.டீ. அமிஸ்தீன் (அஸ்மி) அவர்களின் கவனத்திற்கு பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு சுட்டிக்காட்டி உடனடியாக இவ் வீதியிலுள்ள மின்விளக்கை திருத்துமாறு கோரியும் இதுவரை திருத்துவதற்குரிய எவ்விதமான நடவடிக்கைகளும் தவிசாளரால் மேற்கொள்ளப்படவில்லை.

விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவுள்ள இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் வறுமையின் கீழ் அன்றாடம் கூழித்தொழிலை மேற்கொண்டு வரும் மக்களாகும். இவ்வீதியிலுள்ள மின்விளக்கு பழுதடைந்த நிலையில் தினந்தோறும் இருள் சூழ்ந்த நிலையிலேயே இவ்வீதியினூடாக இம்மக்கள் மிகவும் அச்சத்திற்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.

அது மாத்திரமல்லாது, இவ்வீதியின் நுழைவாயிலில் கடந்த மூன்று வாரங்களில் நான்கு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதோடு, இவ்விபத்தொன்றில் சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவிசாளர் ஐ.டி அமிஸ்தீனின் அலட்சிய போக்காள் இப்பிரதேசத்திலும், வேறு பிரதேசங்களில் இருந்து இக்கிராமத்திற்கு வரும் மக்களின் எவருக்கேனும் உயிர் இழப்புக்கள் ஏற்படின் இதற்கான முழுப்பொறுப்பும் கூற வேண்டியவராக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரே என்பதனையும் மிக மனவருத்தத்துடன் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மக்களின் வாக்குகளை பெற்று வந்த மக்கள் பிரதிநிதியான தவிசாளர் மக்களின் நலனில் அக்கறை செலுத்தாது இப்பொழுது பெருநாள் கழியாட்ட நிகழ்வுகளுக்காக வீன்விரயமாக மின் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், தியாவட்டவான் வட்டாரத்தினை பொருத்த மட்டில் ஆறு கிராமங்கள் உள்ளடங்குகின்றன. வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு 10 மின்விளக்குகள் மாத்திரம்தான் வழங்கப்படும் என சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோதிலும், சில வட்டாரங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானத்தை மீறிய வகையிலும் பத்துக்கும் அதிகமான மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தியாவட்டவான், நாவலடி, பாலைநகர் போன்ற இருள் சூழ்ந்த கிராமங்களில் விஸ ஜந்துக்களின் நடமாட்டங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வசிக்கும் மக்கள் வாழும் கிராமங்களுக்கே அதிகளவான மின்விளக்குகள் பொறுத்தப்பட வேண்டிய தேவைப்பாடும், கடமைப்பாடும் உள்ளது.

ஆனால், இவ்விடயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டு அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனையும் இத்தருனத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

எனவே, மக்கள் நலனை பாராது கழியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு முன்னுரிமைப்படுத்தி வேலைகள் மேற்கொள்ளும் தவிசாளர் சற்று நேரம் ஒதுக்கி பொதுமக்களின் நலன்களிலும் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

ஏ.ஜீ. அஸிசுல் றஹீம் – ஆசிரியர்
பிரதேச சபை உறுப்பினர்,
கோறளைப்பற்று மேற்கு,
ஓட்டமாவடி.

LEAVE A REPLY