புனித ரமலான் காலத்தில் முஸ்லிம் மக்களிடம் நிறைந்திருந்த இறை உணர்வு வாழ்வில் தொடர்ந்திருக்க வேண்டும்

0
157

(அப்துல் சலாம் யாசீம்)

புனித ரமலான் காலத்தில் முஸ்லிம் மக்களிடம் நிறைந்திருந்த இறை உணர்வு வாழ்வில் தொடர்ந்திருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முஸ்லிம் மக்கள் இறைவனின் கட்டளைப்படி ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்கின்றனர். இதனால் அடுத்தவரின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே தான் இம்மாதத்தில் ஏழைகளுக்கு அதிகமதிகம் அவர்கள் வாரி வழங்குகின்றனர்.

இரவு, பகல் பாராது நிறைந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் இறை அன்பை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் நேர்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்கின்றனர்.

இறைவனின் கட்டளையை ஏற்று செயல் படும் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதற்காத தான் அரசு ரமலான் காலத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைகளை வழங்கி வருகின்றது.

இந்த சலுகையை பயன் படுத்தி அதிகமான அரச ஊழியர்கள் இறை தியானங்களில் ஈடுபட்டுவருவதை நான் அறிவேன். இந்த தியான நிலை ரமலான் அல்லாத காலத்திலும் சகலரிடமும் நீடிக்க வேண்டும். இதன் மூலம் அனைவரும் விரும்பக் கூடிய நாள் வாழ்வு வாழ முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY