யாழில் ஈதுல் பித்ர்’நோன்புப் பெருநாள் தொழுகை

0
96

(பாறுக் ஷிஹான்)

‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப்பெருநாள் பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இன்று (16) சிறப்பாக நடைபெற்றது.

யாழ் கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சகையினரும் இணைந்து ஏற்பாடு செய்த முஸ்லிம் வட்டார மக்களுக்கான இப் பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.இதேவேளை வழமை போன்று பெண்களுக்கான தொழுகையும் அதே இடத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி உள்ளக வளாகத்தில் நடைபெற்றது.

அத்துடன் நேற்று யாழ் ஜின்னா மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி) தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

vlcsnap-2018-06-16-07h19m27s246 vlcsnap-2018-06-16-07h19m42s103 vlcsnap-2018-06-16-07h19m56s802

LEAVE A REPLY