இந்து சமய விவகார பிரதி அமைச்சுப் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியதை கண்டித்து மட்டக்களப்பில் இந்து குருமார் ஆர்ப்பாட்டம்

0
119

(விஷேட நிருபர்)

இந்து சமய விவகார பிரதி அமைச்சுப் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து குருமார்கள் நேற்று முன்தினம் (14) வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவிற்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து சமய விவகார பிரதி அமைச்சுப் பதவி காதர் மஸ்தானிடமிருந்து மீளப் பெற்று இந்து மதத்தினை சார்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தினர்.

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் மட்டக்களப்பு இந்துக் குருமார் பேரவை இணைந்துஇந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி இந்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும், உடனடியாக இந்த அமைச்சு பதவியை இரத்து செய்து ஒரு இந்து மதத்தினை சேர்ந்தவருக்கு வழங்கவேண்டும்.

பௌத்தசாசன அமைச்சு பதவியை ஒரு இஸ்லாமிய நபருக்கு வழங்க முடியுமா P அது நிச்சயமாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும் எனவே இது எமது இந்து மதத்தையும் தமிழர்களையும் பழலாங்கும் நிகழ்வாகவே கருதுகின்றோம் என ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு சென்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி;கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் குணநாயகத்திடம் கையளித்தனர்.

இதில் கலந்துகொண்ட இந்து குருக்கள்மார்கள் இஸ்லாமிய விவகார பிரதி அமைச்சராக இந்து ஒருவர் நியமிக்கப்படுவாரா? இல்லையேல் இந்து மதவிவகாரத்திற்கு இஸ்லாமிய நபர் எதற்காக? அரசாங்கமே நீதி சொல்லு நீதி நியாயங்களை கடைப்பிடி, இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள், ஆலையத்தை அழித்தீர் நிலைத்தையும் பிடித்தீர் இனி இந்து மக்களையும் அழித்தொழிப்பீரே, உடனடியாக கொடுத்த பதவியை இரத்துச் செய், இன்று இந்துகுருமார் வீதிக்கு செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என எழுதப்பட்ட பதாதைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த நியமனம் ஒட்டுமொத்த இந்து மதத்தையும் தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளீர்கள், இந்த நாட்டில் சமாதானமும் நல்hட்சியும் இடம்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் மத்தியில் இந்துமக்களாகிய நாங்கள் வாக்களித்து உங்களை அரியாசனததில் அமரச் செய்தோம், இதற்கு பரிகாரமாக இந்துகலாச்சார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்து எம்மையும் எமது மதத்தையும் அவமானப்படுத்தயுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மத குருமார்கள் குறிப்பிட்டனர்.

20180614_093650 20180614_101406

LEAVE A REPLY