ஏறாவூரில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

0
229

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தினரின் SLTJ ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்திருந்த புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் வாவிக்கரை அருகே உள்ள அஹமத் பரீட் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

ஆண்களும் பெண்களும் இந்தத் திடல் தொழுகையை நிறைவேற்றினர்.

எனினும், ஏனைய அமைப்பினரான தௌஹீத் ஜமாஅத் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்றவர்கள் இன்று பெருநாளைக் கொண்டாடாமல் நோன்பிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாவது மாதமான ரமழான் மாதம் முஸ்லிம்களிடையே தனிச் சிறப்பு பெற்று விளங்குவதைப் போல, அந்த ரமழான் மாதத்தை முற்றுப் பெற வைக்கும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தினமும் இஸ்லாத்தில் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது.‪

DSC06147 DSC06155 SLTJ 4 SLTJ 5 SLTJ 6

LEAVE A REPLY