பிறை விடயத்தில் இனியாவது ஓர் தீர்மானத்திற்கு வரலாமே: றஸ்மி மூசா சலபி (MA)

0
372

பெருநாட் தினங்களைத் தீர்மானிப்பதில் நீண்ட நெடுங்காலமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தவறு செய்து கொண்டுதான் வருகிறது. மேமனுக்கும், போறாக்களுக்கும் மாரக்கத்தில் இல்லாத அந்தஸ்த்தைக் கொடுத்து கொழும்பை மையப்படுத்தி முடிவுகளைப் பெறுவதும், அரசாங்கத்தை மேவி முடிவுளைப் மாற்றுவதும் நீண்ட வரலாறாகப்போய்விட்டது.

இந்த நிலை அங்கும் இங்குமாகப் பெருநாள் என்றும் சந்தேக நாட்கள் என்றும் நோன்பு என்றும் பல சமூகமாக சிதறிப்போய் விட்டோம்

.தயவு செய்து இனியாவது ஒரு முடிவிற்கு வாருங்கள் .அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பணிகளில் இருந்து பிறை விவகாரத்தை ஒன்றில் ஒழுங்கு படுத்தவேண்டும். அல்லது மாற்ற வேண்டும் அல்லது பிராந்திய ரீதியாக பிறைக் குழுக்களை அமைத்து ஓர் ஒழுங்கமைப்பிற்கு வரவேண்டும் .

அதே போல் இஸ்லாமிய அமைப்புகள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு ஓர் முடிவிற்கு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

தொடரந்தும் இப்படி சமூகம் கூறுபட்டு பெருநாட்களை கொண்டாடுவது முஸ்லிம் சமூகத்திற்கு உகந்ததல்ல.

இது ஓர் நல்ல தருணம்; இந்த சமூகத்திற்கு சிறந்த தீர்மானங்களைப் பெற.

அல்லாஹ் நமக்கு நல்ல வழிகளைக் காட்டுவானாக.

LEAVE A REPLY