ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்

0
186

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதேவேளை, 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த அருணா தர்ஷன 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்.

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஜப்பான் 14 தங்கம், 15 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

இப்போட்டிகளில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை இந்தியாவும் பெற்றுக்கொண்டன.

ஜப்பானில் ஜூலை 7 திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்ற 18 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

adaderana.lk

LEAVE A REPLY