புதிய இராஜாங்க அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

0
159

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஏழு பேரும் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதுதொடர்பான நிகழ்வு நேற்று (12) ஜனாதிபதி மத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,

ரஞ்சித் அலுவிகார: சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

லகீ ஜயவர்தன: மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அஜித் மான்னப்பெரும: சுற்றுச்சூழல் பிரதியமைச்சர்

அங்கஜன் ராமநாதன்: விவசயாத்துறை பிரதியமைச்சர்

காதர் மஸ்தான்: மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதியமைச்சர்

எட்வட் குணசேகர: உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சர்

நளின் பண்டார: அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு பிரதியமைச்சர்

LEAVE A REPLY