காத்தான்குடி-6, அலியார் சந்தி கொலை: கைதான மூவருக்கும் 25ம் திகதி வரை விளக்க மறியல்

0
618

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் முதியவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர் வரும் 25.6.2018 வரை விளக்க மறியலில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியிலுள்ள ஹோட்டல் கடையொன்றின் உரிமையாளர் கடந்த (08.06.2018) வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் எனும் முதியவரே கொலை செய்யப்பட்டவராவார்.

இவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வரும் காத்தான்குடி பொலிசார் மூன்று சந்தேக நபர்களையும் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் 11.06.2018 திங்கட்கிழமை மாலை ஆஜர் படுத்திய போது இந்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர் வரும் 25.06.2018 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

34827324_2148233125395233_6329879670783213568_o

LEAVE A REPLY