சிப்லி பாறூக் தனது முதலாவது சம்பளத்தை இரண்டு வறுமையான குடும்பங்களுக்கு வழங்கினார்

0
269

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தனது முதலாவது சம்பளத்தை இரண்டு வறுமையான குடும்பங்களுக்கு (11.06.2018) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான சிப்லி பாறூக் தனது மாதார்ந்த சம்பளத்தினை நகர சபையின் பொது நிதிக் கணக்கில் வரவு வைத்து அதனை பொது தேவைகளுக்கு பயன் படுத்துமாறு காத்தான்குடி நகர சபை செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

ஆனால் அவ்வாறு நகர சபையின் பொதுக் கணக்கில் வைக்க முடியாது எனவும் நகர சபை உறுப்பினர் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் அதனை திறைசேரிக்கு திருப்பி அனுப்ப வேண்டி வரும் எனவும் காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் தெரிவித்ததையடுத்து தனது முதலாவது மாத சம்பளத்தினை பெற்று வறுமைக் கோட்டின் கீழுள்ள இரண்டு குடும்பங்களுக்கு நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் நகர சபையில் வைத்தே வழங்கி வைத்தார்.

இதன் போது காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீனும் கலந்து கொண்டார்.

DSCN1330

LEAVE A REPLY