சிறுவர்களில் ஏற்படும் ஆஸ்துமா

0
694

1) ஆஸ்துமா (asthma) என்றால் என்ன? சுவாசக் குழாய்களில் ஏற்படும் மீளக்கூடிய சுருக்கமாகும். இச் சுருக்கம் பரம்பரைக் காரணிகளாலும் சூழற்காரணிகளாலும் ஏற்படும்.

2) ஆஸ்துமாவிற்குரிய அறிகுறிகள் யாவை?

*தொடர்ச்சியான இருமல் (முக்கியமாக இரவில், அதிகாலை, விளையாடிய பின்)

*மூச்சுவிட கஷ்டம் (நெஞ்சிறுக்கம்)

*இழுப்பு (wheezing)

3) ஆஸ்துமா நோயை தூண்டும் முக்கிய காரணிகள்?

-சாதாரண virus காய்ச்சல், தடிமன்
-வீட்டுத்தூசி, உண்ணி
-மகரந்த மணி
-சிகரெட் புகை, நுளம்புத்திரி புகை
-மன அழுத்தம்
– உரோமம்

4)எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

அநேகமாக சிறுவர்களில் 12-14 வயதிற்குள் பூரணமாக கட்டுப்படுத்த முடியும்.
சொற்பளவானோர்க்கு வளர்ந்த பின்னும் காணப்படும்.

5) எப்படி கட்டுப்படுத்துவது ?

– தூண்டல் காரணிகளை தவிர்த்தல்
-மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி எடுத்தல்
-ஆஸ்துமா பதிவேடு (asthma diary) ஆஸ்துமா செயற்பாட்டுத்திறன்(asthma action plan) இனை பேணி நடத்தல்.

6)ஆஸ்துமா சிறுவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு தேவையா?
*இல்லை, ஆனால் ஒவ்வாமை (allergy) ஏற்படும் உணவுகளை தவிர்த்தல்.

7) குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுதல் ஆஸ்துமாவை தடுக்குமா?

*ஆம். தாய்ப்பாலூட்டுதல் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8) ஆஸ்துமாவிற்குரிய சிகிச்சை முறைகள் யாவை?
* இரு வகைப்படும்.
I)-ஆஸ்துமா வரும்போது பாவிக்கும் நிவாரணிகள்
Ex) சல்பியூற்றமோல்/ரேபியூற்றலின்.
இவை குளிசை/பாணி , பம்(Inhaler) மூலம் பயன்படுத்தப்படும்.

II)-ஆஸ்துமா தாக்கம் ஏற்படுவதை தடுக்கும் மருந்துகள்.
Ex) பிறிட்னிசலோன்

9)ஆஸ்துமா சிகிச்சையில் பாவிக்கப்படும் கருவிகள்.
-Inhaler
-Spacer
-Mask
இக்கருவிகளை வைத்திய ஆலோசனைப்படி பாவிப்பதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.

முஹம்மது ஸில்மி,
வைத்திய மாணவன்,
கிழக்கு பல்கலைக்கழகம்.

asthma-938695_960_720 lungs-39981__340 asthma-156094__340

LEAVE A REPLY