(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை

0
929

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் முதல் தடவையாக வீட்டுத் தோட்டமொன்றில் நடு செய்யப்பட்ட றம்புட்டான் பழங்கள் (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை அறுவடை செய்யப்பட்டது.

காத்தான்குடி 3ம் குறிச்சி ஹசன் மெலாளானா வீதியில் வசிக்கும் கே.எம்.அலியார் என்பவர் அவரது வீட்டில் வீட்டுத்தோட்டத்தில் இந்த றம்புட்டான் செய்கை மேற் கொண்டிருந்தார்.

இந்த அறுவடை வைபவத்தில் விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், மட்டக்களப்பு மத்தி வலயத்தற்கான உதவி விவசாயப்பணிப்பாளர் எம்.சி.சலீம், காத்தான்குடி பிரதேசத்திற்கான விவசாய போதானாசிரியை முபீதா றமீஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இங்கு செய்கை பண்ணப்பட்ட றம்புட்டான் பழங்கள்அறுவடை செய்யப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் றம்புட்டான் பழம் செய்கை என்பது மிகவும் அரிதானதாகும்.

இங்கு இந்த றம்புட்டான் செய்கை பண்ணப்படுவதில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் திக்கோடை, பழுகாமம் ஆகிய இடங்களில் நடுகை செய்யப்பட்டுள்ளன. காத்தான்குடியில் றம்புட்டான் பழங்கள் நடுகை செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

DSCN0952 DSCN1237 DSCN1250

LEAVE A REPLY