திருகோணமலை மாவட்டத்தில் பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பில் 35 பேர் கைது

0
112

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் பொலிஸார் முன்னெடுத்த விஷேட சோதனையின் போது எட்டு பொலிஸ் நிலையங்களிலும் 33 பேர் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தலைமைய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய நான்கு சாரதிகளை கைது செய்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த ஏழு பேரை கைது செய்துள்ளதுடன் நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டும் தலைமறைவாகி இருந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், மிகிந்தபுரம்,கனேஸ் லேன் பகுதியில் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஜந்து பேரை கைது செய்துள்ளதாகவும் மொத்தமாக தலைமைய பொலிஸ் பிரிவில் 18 பேரை கைது செய்துள்ளதாகவும் தலைமைக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கிண்ணியா பொலிஸ் பிரிவில் இரண்டு பேரையும்,குச்சவௌி பொலிஸ் பிரிவிலுள்ள திரியாய் பகுதியில் திரியாய் மத்திய மருந்தகத்தை உடைத்தமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் சீனக்குடா பொலிஸ் பிரிவில் ஒருவரையும் கோமரங்கடவெல பொலிஸ் பிரிவில் ஒருவரையும் , கன்தளாய் பொலிஸ் பிரிவில் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மூதூர் பொலிஸ் பிரிவில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஜவரை கைது செய்துள்ளதாகவும் உப்புவௌி பொலிஸ் பிரிவிலுள்ள கன்னியா பகுதியில் குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் மது போதையில் வாகனம் செலுத்திய மூன்று சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை மற்றும் மூதூர் ,கன்தளாய் போன்ற நீதிமன்றங்களின் நீதவான்கள் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படி அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY