கலா­நிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் இன்று எம்.பியாக சத்தியப் பிரமாணம்

0
384

தென்­கி­ழக்குப் பல்­கலைக் கழ­கத்தின் முன்னாள் உப வேந்தர் கலா­நிதி எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் இன்று பார­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­வுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசிப்­பட்­டியல் ஊடாக இவர் பாரா­ளு­மன்றம் செல்­கின்றார்.

ஐக்­கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வழங்­கி­யி­ருந்த தேசியப் பட்­டி­யல் மூலம் பாரா­ளு­மன்றம் சென்ற எம்.எச்.எம்.நவவி இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து ஏற்­பட்ட வெற்­றி­டத்­துக்கே இவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவர் சம்­மாந்­து­றையைச் சேர்ந்த முகம்­மது தம்பி போடி சீனி­மு­கம்­மது – கதீஜா உம்மா தம்­ப­திக்கு 1962ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 17ஆம் திகதி மக­னாக சம்­மாந்­து­றையில் பிறந்தார்.இவர் தனது ஆரம்பக் கல்­வியை சம்­மாந்­துறை மகளிர் வித்­தி­யா­ல­யத்தில் கற்றார்.

அதன் பின்னர் இரண்டாம் தரக் கல்­வியை சம்­மாந்­துறை மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­தர வர்த்­தகப் பிரிவில் கற்று சித்­தி­ய­டைந்து 1982 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்ட புல­மைப்­ப­ரிசில் மூலம் ரஷ்­யாவின் டொனெஸ்க் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்குத் தெரி­வாகி தனது பட்­டப்­ப­டிப்பைப் பூர்த்தி செய்தார்.

தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முது­மானி சமூக விஞ்­ஞான பீடத்தின் துறைத்­த­லை­வ­ரா­கவும்,முகா­மைத்­துவம் மற்றும் பொரு­ளியல் பீட பீடா­தி­ப­தி­யா­கவும் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் Procto ஆகவும் கடை­யாற்­றி­யுள்ளார். அத்­துடன்,

இவர் 2009ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக இரு தடவைகள் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli.lk

LEAVE A REPLY