காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பௌமி மற்றும் அவரது சகோதரர் மீதும் தாக்குதல்; இருவர் கைது

0
806

(விஷேட நிருபர்)

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எம்.பௌமி மற்றும் அவரது சகோதரர் ஏ.எம்.பாஸித் ஆகிய இருவர் மீதும் இன்று (08) வெள்ளிக்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இவர்கள் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகள் தனது காரில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் அவரது சகோதரரும் சென்று கொண்டிருந்த போது புதிய காத்தான்குடி தோனாக்கால்வாய் பகுதி சந்தியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றின் முன்பாக வாகனம் ஒன்று வீதிப் போக்குவரத்துக்கு தடையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர் வினவ முற்பட்ட போது வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் சிறிய காயங்களுக்குள்ளான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பௌமி மற்றும் அவரது சகோதரர் பாஸித் ஆகிய இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் இவ்விருவரையும் தாக்கிய இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனத்தின் சாரதியும் நடாத்துனருமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் உறுப்பினர் ஏ.அமீர்அலி உட்பட நகர சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்த உறுப்பினர் பௌமியை பார்வையிட்டதுடன் சுகம் விசாரித்து வருகின்றனர்.

34752156_2148100032075209_8487741063576944640_n 34888015_2148099742075238_3295798679922802688_o

LEAVE A REPLY