கலாசார உத்தியோகத்தர் காத்தான்குடி பஸீர் மதனீ வபாத்

0
431

(விஷேட நிருபர்)

காத்தான்குடி 2ம் குறிச்சி, ஊர் வீதியைச் சேர்ந்த எம்.ஐ.எம். பஸீர் மதனீ இன்று (08) வெள்ளிக்கிழமை பிற்பகள் வபாத்தானார்.

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்)

சில மாத காலம் சுகவீன முற்றிருந்த நிலையில் 44வது வயதில் இவர் வபாத்தானார்.

ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இவர் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தார்.

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 2003ம் ஆண்டு மதீனா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறினார்.

காத்தான்குடியிலுள்ள கிழக்கிலங்கை ஸாஹிறா வலது குறைந்தோர் அமைப்பின் செயலாளராகவும், காத்தான்குடி மத்தியஸ்த சபையின் உப தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

லஜ்னதுஸ் ஸுன்னா மகளிர் அறபுக்கல்லுரியின் உப தலைவராகவும் மஅஹத்துஸ் ஸுன்னா அமைப்பின் நிருவாகியாகவும் விரிவுரையாளராகவும் செயற்பட்டு வந்தார்.

சிறந்த பேச்சாற்றல் மிக்கவரான மௌலவி பசீர் மதனீ, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையிலும் அங்கத்தவராக இருந்து வந்தார்.

இவர் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றியதுடன் இவரது கலாசார உத்தியோகத்தர் காலப்பகுதியிலேயே காத்தான்குடியில் இஸ்லாமிய பாரம்பரிய தேசிய கண்காட்சி நடாத்தப்பட்டதுடன் அதனை முன் நின்று நடாத்தியவர்களில் இவரும் ஒருவராகும்.

தஃவாப்பணியில் இஸ்லாமிய பிரச்சாரகராகவும் ஈடுபட்டு வந்தார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!

LEAVE A REPLY