இலங்கை துறைமுக அதிகாரசபையின் இப்தார் நிகழ்வு

0
180

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கை துறைமுக அதிகாரசபை வருடந்தோறும் நடாத்திவரும் துறைமுக முஸ்லிம் ஊழியர்களுக்கான இப்தார் நிகழ்வு புதன்கிழமை (06), கொழும்பு -10 மாளிகாவத்தை செரண்டிப் கிராண்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

துறைமுக அதிகாரசபையின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இப்தாருக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை துறைமுக அதிகாரசபை – முஸ்லிம் மஜ்லிஸ் சிறப்பாக செய்திருந்தது.

பிரதித் தலைவர் பி.ஜி.தசாநாயக்க, துறைமுக மஜ்லிஸ் செயலாளர் ஏ.எல்.எம். ஸும்ரி ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.

இலங்கைதுறைமுக அதிகாரசபையின் உயர் முகாமைத்துவ அதிகாரிகள் இந்த இப்தாரில் அதிதிகளாக கலந்து கொண்டதோடு, நிகழ்வை மஜ்லிஸ் பிரசாரச் செயலாளர் ஏ.சீ.எம். கலீலுர் ரஹ்மான் நெறிப்படுத்தினார்.

நிகழ்வில் விஷேட அதிதிகள் மற்றும் துறைமுக அனைத்து முஸ்லிம் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

1 2

LEAVE A REPLY