குச்சவௌி மற்றும் சேறுநுவர பொலிஸ் பிரிவுகளில் திருட்டுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது

0
106

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவௌி மற்றும் சேறுநுவர பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு, கோடா போன்ற மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (07) வியாழக்கிழமை மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேறுநுவர பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தங்கநகர் குளக்கட்டினால் மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்று வீடு திரும்புவதாக கூறிய நபரை சோதனையிட்ட வேளை 38 கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யபப்பட்டவர் கிளிவெட்டி, தங்கநகர் பகுதியைச் சேர்ந்த வை.விமலகாந்தன் (27வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இதேவேளை குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கும்புறுபிட்டி பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் பேரில் இரண்டு பெர் கைது செய்யப்பட்டனர்.

இச்சந்தேக நபர்கள் கும்புறுபிட்டி 05ம் வட்டாரத்தைச் சேர்ந்த கே.பிரசாந்தன் (23வயது) மற்றும் யோகராஜா சுதர்ஷன் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 13 கசிப்பு போத்தல்களும் 88 கோடா போத்தல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

LEAVE A REPLY