மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானத்தில் சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்

0
100

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கல்லாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு படை வீரரின் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானத்தில் செவ்வாய்க்கிழமை (06) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சேறுநுவர, சோமபுர, LB 2 பகுதியைச் சேர்ந்த எஸ்.டி. புஸ்பகுமார ரணசிங்க (42வயது).

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

EP TQ-5222 எனும் இலக்கமுடைய மொட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற படை வீரரின் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான படைவீரரின் சடலம் பிஶேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY