தாய்ப்பால் புரைக்கேறியதில் ஒன்றரை மாத சிசு மரணம்

0
125

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தாய்ப் பால் புரைக்கேறி சுமார் ஒன்றரை மாதங்களேயான ஆண் சிசு மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (07) வியாழக்கிழமை மரணித்த சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த டனூஜன் எனும் இக்குழந்தையின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் ஊட்டிய நிலையில் மயக்கமுற்ற அக்குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கும்போதே மரணித்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அக்குழந்தை பிறப்பு ரீதியாகவே 11 வகையான உடற் குறைபாடுகளுடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY