ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக கொழும்பு மட்டக்குளிய பதுறியா பள்ளிவாசலுக்கு நிதி உதவி

0
199

கொழும்பு -15, மட்டக்குளிய பதுறியா ஜும்ஆ பள்ளிவாசலின் நீண்ட கால தேவையாக இருந்த ஒலிபெருக்கி சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் வழங்கி வைத்தது.

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் மட்டக்குளிய பதுறியா பள்ளிவாசல் நிர்வாகம் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தது.

அதற்கமைய இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் எம்.றிஸ்லி ஊடாக குறித்த ஒலிபெருக்கி சாதனங்களைப் பெற்றுக்கொள்ளவற்கு தேவையான ஒரு இலட்சத்தி முப்பது ஆயிரம் ரூபாய் பொறுமதியான காசோலை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY