வாக்குரிமையின் முக்கியத்துவம் பற்றி விழிப்பூட்டும் செயலமர்வு

0
37

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு இடம்பெற்று வருவதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே. ஜெனிட்டன் தெரிவித்தார்.

திருகோணமலை கல்வி வலயத்தை சேர்ந்த உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் திங்களன்று 04.06.2018 இந்த செயலமர்வு இடம்பெற்றது.

இந்த விழிப்பூட்டல் நிகழ்வில் உரையாற்றிய திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரித்தார்.

தனி நபர்கள் தமது வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை இதற்கு போதிய தெளிவின்மையே இதன் காரணம்.

18 வயது பூர்த்தியான சகல இலங்கை பிரஜைகளும் வாக்காளர் பதிவு படிவத்தில் முறையாக பதிவு செய்து கொள்ளல் வேண்டும். வாக்குரிமையை விட வாக்காளர் இடாப்பில் தனது பெயரைப் பதிவு செய்வதன் மூலம் ஒரு பிரஜைக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். சுதாகரன் வாக்குரிமை, ஆளுகை போன்ற விடயங்களைச் சிலாகித்துப் பேசினார்.

வாக்காளர் இடாப்பிலே பதிவு செய்வதையோ வாக்களிப்பதையோ இலங்கையில் கட்டாயப்படுத்தப்படாததன் காரணமாக மக்கள் அது தொடர்பில் முக்கியத்துவம் காட்டுவதில்லை.

அபிவிருத்தி அடைந்த நாடுகள் பலவற்றில் வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப் பதிவு செய்தல் கட்டாயப்படுத்தப்பட்டதனால் அங்கு அந்நாடுகளில் வாக்குரிமையின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.

இலங்கையில் சராசரியாக 65 சத வீதமான மக்களே வாக்களிக்கின்றனர். 35 சத வீதமான மக்கள் தமது வாக்குகளை பிரயோகிக்காமை காரணமாக பொருத்தமற்றவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுவது துரதிருஷ்மாகும்’ என்றார்.

இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், திருகோணமலை கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

1

LEAVE A REPLY