இரு குழுக்களுக்கிடையே மோதல் வால்வெட்டில் 6 பேர் படுகாயம்

0
217

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை சல்லி கோயில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே இன்றிரவு (05) 8.10 மணியளவில் இடம் பெற்ற மோதலில் வால் வெட்டுக்கு இலக்காகி ஆறு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வால்வெட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை, திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த எஸ்.தக்ஸன் (28வயது) ஆனந்தபுரி, 02ம் ஒழுங்கையைச் சேர்ந்த கே.சுலக்ஸன் (18வயது) பல்லத்தோட்டம், முருகாபுரியைச் சேர்ந்த ஐே.புவிந்தன் (27வயது) மற்றும் திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த டி.ஐெயசாந் (25வயது) இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த ஐே.பிரனவன் (26வயது) அத்துடன் கும்புறுபிட்டி, நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த வீ.விஐிதரன் (23வயது) ஆகியோர் எனவும் தெரிய வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கைகலப்பே இன்றைய வால்வெட்டுக்கு காரணம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

வால் வெட்டு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY