ஆளுநர்களின் கைகளிலேயே அதிகாரங்கள்

0
160

மாகாண சபை ஆட்சி, பிரதேச மக்களின் கைகளில் உள்ளது என்று கூறப்பட்டாலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அதிகாரங்கள், பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே உள்ளன என, கிழக்கு மாகாண முன்னாள் முலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் நேற்று (03) விடுத்துள்ள அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களினதும் அதிகாரங்கள், அதனதன் முதலமைச்சர்களின் கைகளிலேயே முற்றுமுழுதாக இருந்து இயங்குகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரம், அந்த மாகாண முதலமைச்சர்களின் கைகளில் இல்லை. மாறாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாகாண ஆளுநர்களின் கைகளிலேயே பெருமளவுக்குக் காணப்படுகின்றன.

“இதனால் வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களின் அதிகாரத்துக்கான சுதந்திர எல்லைகள், மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்து வந்துள்ளன.

“வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்களும் ஏனைய மாகாண முதலமைச்சர்கள் போன்றே, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருந்த போதும், ஏதோ ஒருவகையில், இவர்களது நடவடிக்கைகளை, ஆளுநர்கள் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் முயற்சிகளையே முன்னெடுத்து வந்தள்ளனர்.

“எனினும், கிழக்கு மாகாணத்தில், எனது தலைமையிலான ஆளுகைக் காலத்தில், மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பல்வேறு படிப்பினைகளை கிழக்கு மக்களுக்கும் ஏனைய மாகாண மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வூட்டக் கூடியதாக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY