12 வருடங்களுக்கு பின் அந்-நூர் தேசிய பாடசாலையில் 2006ம் ஆண்டு O/L பழைய மாணவர் சங்கம் உதயம்

0
267

(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ், வாழைச்சேனை)

2006 ம் ஆண்டு அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி பொது சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்கள் சுமார் 12 வருடங்களுக்கு பின்பு நேற்றைய தினம் (03) ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை 4ம் வட்டாரத்தில் உள்ள பழைய மாணவர் சங்க உறுப்பினர் ஏம்.எம்.றிபான் இல்லத்தில் இப்தார் நிகழ்வோடு ஒன்று கூடினர்.

இந்நிகழ்வில் பழைய மாணவர்கள் சுமார் 30ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பாடசாலையின் முன்னால் அதிபர் யூ.அகமட் அவர்களும் தற்போதைய அதிபர் எச்.எம்.தாஹிர், ஆசிரியர் எல்.டி.எம்.சாதீக்கீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இப்தார் முடிவடைந்த பிறகு நிகழ்வை பழைய மாணவர் ச.உ எச்.எம்.றிஸ்வான் (நளிமி) துஆவுடன் நிகழ்வை ஆரம்பித்தார். அந்த வகையில் செயலாளர் தெரிவு முதலில் இடம் பெற்றது செயலாளராக சபையோரால் கே.எல்.எம்.ஹம்ஸீர் தெரிவு செய்யப்பட்டார்.

தலைவராக எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக ஏம்.எம்.றிபான் தெரிவு செய்யப்பட்டார். பிரதி தலைவராக ஏ.ஜி.அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார்.உப செயலாளராக எம்.எச்.எம்.இம்ரான் தெரிவு செய்யப்பட்டார்.

பதவி வழியாக ஐந்து உறுப்பினர்களும் நிருவாக உறுப்பினர்களாக ஆறு நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஏ.எம்.அஸ்லம், ஏ.எல்.எம்.இர்சாத், எம்.எம்.றிப்கான், எச்.எம்.றிஸ்வான் (நளிமி), எம்.பைரூஸ், மெளலவி எம்.நபீல் ஆகியோர் சபையோரால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் பின்னார் பாடசாலை அதிபர் எச் எம்.தாஹிர் அவர்கள் உரையாற்றினார் எமது பழைய மாணவர் சங்கத்தின் தேவைப்பாடுகள் மற்றும் பாடசாலையின் வளர்ச்சியில் நாம் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் என்பவற்றை வேண்டி நின்றார்.

12 வருடங்களுக்கு பிறகும் வெவ்வேறு திசைகளில் பயனித்த நீங்கள் ஒன்று சேர்ந்து இச்சமூகத்திற்கு தொண்டாற்ற முனைந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் என்று கூறி தனது உரையை முடித்தார்.

அதன் பிற்பாடு எமது பாடசாலையின் முன்னால் அதிபர் யூ.அகமட் அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார் தான் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் 2006 O/L மாணவர்களாகிய நீங்கள் பாடசாலையில் பல்வேறு திறன்பட வேலைகளை செய்துள்ளீர்கள் அக்காலப் பகுதியில் இடம் பெற்ற பாடசாலையில் மிகப் பெரும் கண்காட்சி நிகழ்வில் தங்கள் வகுப்பினர் அதிக பங்களிப்புக்களும் ஒத்தாசைகளையும் வழங்கி இருந்ததை என்னால் இன்னும் மறக்க முடியாதுள்ளது என்று தனது உரையில் சுற்றிக் காட்டினார்.

அத்தோடு எமது பாடசாலையின் முழு வரலாற்றையும் உள்ளடக்கிய ஆவமனாக ஒரு புத்தகத்தையும் வெளியிட தற்போதைய பாடசாலை நிருவாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

மேலும் ஆசான் எல்.டீ.எம். சாதிக்கீன் அவர்களும் சிறிது நேரம் உரையாற்றினார். அத்தோடு எமது அதிதிகள் உரை முடிவடைந்து, நன்றி உரை செயலாளரினால் வழங்கப்பட்டு இனிதே முடிவடைந்தது.

அதன் பிற்பாடு மஃரிப் தொழுகையுடன் எமது அனைத்து நிகழ்வுகளும் முடிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.

20180603_181108 20180603_181153 20180603_181225

LEAVE A REPLY